பைக் பேரணியில் வினோஜ் செல்வம் ஆவேசம் vinoj p.selvam bjp bike rally
பைக் பேரணியில் வினோஜ் செல்வம் ஆவேசம் vinoj p.selvam bjp bike rally annamalai tamilnadu bjp arvind menon independence day 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திநகரில் உள்ள பாஜ தலைமையகத்தில் இருந்து புறப்பட்ட பைக் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார். பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் தொண்டர்கள் பைக் பேரணியில் பங்கேற்றனர். பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் சென்னை அஸ்தினாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பஸ் நிலையம் வரை பைக் பேரணி நடைபெற்றது. தேசியக்கொடியை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பைக்கில் வலம் வந்தனர். பல்லாவரத்தை பேரணி அடைந்ததும் தேசியக் கொடியை வினோஜ் பி செல்வம் ஏற்றி இனிப்பு வழங்கினார்.