அரசு பஸ்சில் ரகளை செய்த போதை வாலிபருக்கு காப்பு Youth arrested Tiruvannamalai
அரசு பஸ்சில் ரகளை செய்த போதை வாலிபருக்கு காப்பு Youth arrested Tiruvannamalai Police free bus women fight திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 12 கட்டணம் இல்லா அரசு பஸ் ஏனாதவாடி கிராமத்துக்கு புறப்பட்டது. ஆண்களுக்கு கண்டக்டர் கவுதமன் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு வாலிபரிடம் டிக்கெட் வாங்கும்படி சொன்னார். ஆனால், அவன் வாங்க மறுத்தான். பொம்பளைங்களுக்கு மட்டும் இலவசமா? எங்களுக்கு இல்லையா என கிண்டலாக கேட்டும், தகாத வார்த்தைகளை பேசியும் பஸ்சில் ரகளையில் ஈடுபட்டான். அவன் ஃபுல்போதையில் இருப்பதை அறிந்த கண்டக்டர், நீ டிக்கெட்டே எடுக்க வேணாம்; கீழே இறங்கு என்றார். டிரைவர் பஸ்சை நிறுத்தினார். நீ இறங்கினால்தான் பஸ்சை எடுப்பேன் என்றார். ஆனால், அந்த வாலிபன் விடவில்லை. பஸ்சை விட்டு இறங்க மாட்டேன் என அடம்பிடித்து படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டான். ஏம்பா இப்படி பண்றே, டிக்கெட் எடுக்க வேண்டியதுதானே.. வாலிபரை மற்ற பயணிகள் கேட்க, அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். பெண்களையும் மாணவிகளையும் சகட்டு மேனிக்கு தகாத வார்த்தைகளால் திட்டினான். பொறுமை இழந்த கண்டக்டர் கவுதமன் மோரணம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.