வயநாடை தொடர்ந்து இடுக்கியை உலுக்கும் சம்பவம் | Idukki | River | Rain
வயநாடை தொடர்ந்து இடுக்கியை உலுக்கும் சம்பவம் | Idukki | River | Rain கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு கடந்த வெள்ளியன்று கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. அன்றைய தினம் பகலில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இரவு 8 மணி முதல் இடுக்கியின் தொடுபுழா உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடுபுழா அருகே வண்ணப்புரம் ஊராட்சியில் பெய்த மழையில் முள்ளிரிங்காடு, வெள்ளக்கயம் பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. ஆறு, ஓடைகளில் மண் கலந்த காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து. இதனால் பல இடங்களில் மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. முள்ளரிங்காடு பகுதியில் லூர்துமாதா சர்ச் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ரோட்டில் ஓடியது. அப்போது இரவு 8.30க்கு சர்ச்சை நோக்கி சென்ற பாதிரியார் ஜேக்கப் கார் ஆற்று நீரில் சிக்கிக் கொண்டது. அப்பகுதியினர் காரில் இருந்த பாதிரியாரை மீட்ட நிலையில் கார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த துயரமே இன்னும் மக்கள் மனதை ரணமாக்கி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.