/ தினமலர் டிவி
/ பொது
/ ஜார்க்கண்ட் அரசியலில் திடுக்கிட வைக்கும் திருப்பம் | Champai Soren | Jharkhand
ஜார்க்கண்ட் அரசியலில் திடுக்கிட வைக்கும் திருப்பம் | Champai Soren | Jharkhand
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் பண மோசடி வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். பின் ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதனால் சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். விரைவில் அவரது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைவார் என்ற தகவல் வெளியானது. இப்போது சம்பாய் சோரன் டில்லியில் முகாமிட்டுள்ளார். அவருடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் டெல்லி வந்துள்ளனர்.
ஆக 19, 2024