உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பம் | Rahul case | Delhi high court

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பம் | Rahul case | Delhi high court

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பம் | Rahul case | Delhi high court | Subramanian swamy | Rahul citizenship | பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த 2019ல் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் 2003ம் ஆண்டு ஆவணங்களின் படி, பிரிட்டன் பேக்அப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர், செயலராக ராகுல் இருப்பதாக உள்ளது. அந்த நிறுவனத்தின் வருமான வரி தாக்கலிலும் ராகுல் பிரிட்டன் குடியுரிமை கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை இரட்டை குடியுரிமை என்பது அமலில் இல்லை. வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர் இந்திய குடியுரிமை பெற்றவராக கருதமாட்டார் என்பதை அரசியலைமைப்பு சட்டப்பிரிவு 9 உறுதி செய்கிறது. இதனால் ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு ஒன்றை தாக்கல்செய்தார். இந்த மனு நீதிபதி சஞ்சீவ் நரூலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்காக தாக்கல் செய்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நேரில் ஆஜராகி வாதாடிய சுப்ரமணிய சாமி, ராகுல் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், இது அரசாங்கம் சம்மந்தப்பட்ட விஷயம். எனவே பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளேன். எனது புகார் குறித்து ராகுலிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு புகாரின் நிலை குறித்து எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். இதைக் கேட்ட நீதிபதி, பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பாக இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ