உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் ஊழியர்கள் கதறல்: பால் உற்பத்தி பாதிப்பு Aavin Milk Kakkalur Chilling centre

பெண் ஊழியர்கள் கதறல்: பால் உற்பத்தி பாதிப்பு Aavin Milk Kakkalur Chilling centre

பெண் ஊழியர்கள் கதறல்: பால் உற்பத்தி பாதிப்பு Aavin Milk Kakkalur Chilling centre woman employee accident milk production திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து தினமும் 90 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்றிரவு பால் பாக்கெட்டுகளை எடுத்து அடுக்கி வைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்னர். உமா மகேஸ்வரி வயது 30 என்ற ஊழியரின் துப்பட்டாவும், தலை முடியும் அருகில் இருந்த எந்திரத்தின் மோட்டார் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி உமா மகேஸ்வரியின் தலை துண்டானது. இதைப் பார்த்து மற்ற பெண் ஊழியர்கள் கதறி அழுதனர். உமா மகேஸ்வரி 6 மாதத்துக்கு முன்தான் ஆவினில் வேலைக்கு சேர்ந்தார். உமா மகேஸ்வரிக்கு கணவர், 2 மகன், ஒரு மகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், வேலைக்காக சென்னைக்கு வந்தனர். திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தனர்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ