பாம்பன் ரயில் பாலத்தில் மாஸ் காட்டிய ரயில்வே | Pamban Bridge
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேஸ்வரம் தீவுக்கு இடையே கடலில் பாம்பன் ரயில் பாலம் செயல்பட்டு வந்தது. 1914ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் பலம் இழந்துவிட்டதால் கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 550 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் காட்டும் பணி தொடங்கியது. பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடலில் 333 கான்கிரிட் அடித்தளங்கள், 101 கான்கிரிட் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் தண்டவாளம் போடப்பட்டது. 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்ட நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது.
ஆக 21, 2024