விசாரணை வளையத்தில் வந்த விசிக நிர்வாகி யார்? | Armstrong | VCK
விசாரணை வளையத்தில் வந்த விசிக நிர்வாகி யார்? | Armstrong | VCK பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே கொல்லப்பட்டது தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கியது. இதுவரை திமுக, அதிமுக,பாஜ, காங்கிரஸ், விசிக கட்சியினர், வக்கீல்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூலிப்படைக்கு பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக சிறையில் இருந்தே இந்த கொலைக்கு பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார். இதனை ரவுடி சம்போ செந்தில் செய்து முடித்தாக கூறப்படுகிறது. இவருக்கு உதவிய பலரும் கைதான நிலையில் சம்போ செந்தில் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார். சம்போ செந்திலுக்கு உதவிய வக்கீல் மொட்டை கிருஷ்ணாவும் இருக்கும் இடம் தெரியவில்லை. ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய போலீசார், இவர்கள் இருவரையும் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளனர். விசாரணையின் தொடர்ச்சியாக இப்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைதானவர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து தூக்கினர். இவர்களில் கோபி, குமரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு வாங்கி வந்துள்ளனர். வாங்கிய வெடிகுண்டுகளை ரவுடி நாகேந்திரன் தரப்பிடம் கொடுத்துள்ளனர். இவர்களை தவிர கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உட்படை பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த மூன்று பேரை தொடர்ந்து விசிக தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வத்திடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தான் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என கூறப்படுகிறது.