இன்டர்நெட்டை அதிர வைத்த மோடி-ஜெலன்ஸ்கி | PM Modi ukraine visit | Modi-Zelenskyy | Russia vs Ukraine
இன்டர்நெட்டை அதிர வைத்த மோடி-ஜெலன்ஸ்கி | PM Modi ukraine visit | Modi-Zelenskyy | Russia vs Ukraine மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க உக்ரைன் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பேசினர். உக்ரைனில் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருவது பற்றி நீண்ட நேரம் பேசினர். அமைதி வழியில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் பற்றி மோடி தெளிவாக எடுத்துரைத்தார். மோடி தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார். நாங்கள் எப்போதும் அமைதியின் பக்கம் துணை நிற்போம் என்று இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி உறுதியாக எடுத்துரைத்தார். இந்த சந்திப்பு நெகிழ்ச்சியுடன் துவங்கி மகிழ்ச்சியுடன் முடிந்தது. உக்ரைனுடன் இந்தியா ராஜதந்திர உறவை துவங்கிய பிறகு, அந்த நாட்டுக்கு சென்ற முதல் பிரதமர் மோடி தான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் முதல் முறையாக உக்ரைன் வந்ததும் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி அடைந்தார். மோடியை உற்சாகம் பொங்க வரவேற்றார். ஜெலன்ஸ்கியை மோடி கட்டித்தழுவிய போது, அவர் உடல் சிலிர்த்து போனார். ஜெலன்ஸ்கி இந்தியா வர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார். இந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியர்களை அதிகம் நேசிக்கிறேன். நிச்சயம், நான் இந்தியா வருவேன் என்று ஜெலன்ஸ்கியும் உத்தரவாதம் அளித்தார். மோடியும், ஜெலன்ஸ்கியும் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம், வீடியோக்களை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக 5 படங்கள் அடங்கிய ஒரு பதிவை மோடியும், ஜெலன்ஸ்கியும் கொலாப்பரேஷன் செய்து இன்டாகிராமில் பதிவு செய்தனர். மோடியும் ஜெலன்ஸ்கியும் கைகுலுக்கும் போட்டோ, கட்டித்தழுவும் போட்டோவும் அதில் இருந்தன. அந்த போட்டோக்கள் உலக அளவில் மக்களை வெகுவாக கவர்ந்தன. லைக்குகள் குவிந்தன. 24 மணி நேரத்தில் 2.5 மில்லியன் லைக் விழுந்தது. தொடர்ந்து அந்த பதிவு ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.