உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை: நடுக்கடலில் நடந்தது என்ன? |Nagai Fishermans attacked

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை: நடுக்கடலில் நடந்தது என்ன? |Nagai Fishermans attacked

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை: நடுக்கடலில் நடந்தது என்ன? |Nagai Fishermans attacked | Sri lankan Pirates | Nagai நாகை மாவட்டம், செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர் தங்கதுரை என்பவர் ஃபைபர் படகில் அவரது மகன் மணிகண்டன் மற்றும் கங்காதரனுடன் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென 3 அதிவேக படகுகளில் அங்கு வந்த 10 இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை சுற்றி வளைத்தனர். கத்தி, ரப்பர் தடியுடன் படகுக்குள் இறங்கினர். மீனவர்களை கடுமையாக தாக்கினர். மூவருக்கும் கை கால்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. படகில் இருந்த சுசுகி இன்ஜின், 500 கிலோ வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன் என ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தங்கதுரையின் வெள்ளி அரைஞாண் கயிறையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். பின்னர் மீனவர்கள் படகில் இருந்த மற்றொரு இன்ஜினை இயக்கி கரை வந்து சேர்ந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்தனர். இந்த சம்பவம் குறித்து செருதூர் மீனவர்கள் நாகை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இலங்கை கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் நாகை மீனவர்கள் இடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி