ஸ்டாலின் அறிவுரையை உடன்பிறப்புகள் கடைபிடிப்பார்களா? | M.K.Stalin | America trip
ஸ்டாலின் அறிவுரையை உடன்பிறப்புகள் கடைபிடிப்பார்களா? | M.K.Stalin | America trip | Wrote letter | DMK officials அமெரிக்க பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கு பயணத்தில், மற்றொரு கட்டம்தான், இந்த அமெரிக்கப் பயணம். தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கென தனியாக நேரத்தை ஒதுக்கி தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ல், சிகாகோவில் தமிழர்கள் உடனான மாபெரும் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்த பயணத்தின் நோக்கம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான். முதல்வர் வெளிநாடு சென்றாலும், தமிழகத்தில் எந்த பணியும் தடைபடாமல் நடக்கிறது என, மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்கும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். ஆட்சி பணியும், கட்சி பணியும் தொய்வின்றி தொடர, ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் இணைந்து, ஒவ்வொருவரும் தங்கள் கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கும் வகையில், செயலில் வேகம்,- சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள். அமெரிக்காவில் இருந்தாலும் தமிழகத்தை பற்றியேதான் என் மனம் சிந்திக்கும்; பார்வை கண்காணிக்கும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.