உச்சக்கட்ட பீதியுடன் துபாய் பறந்த ஸ்டாலின் விமானம் | bomb threat for stalin plane | Stalin US visit
உச்சக்கட்ட பீதியுடன் துபாய் பறந்த ஸ்டாலின் விமானம் | bomb threat for stalin plane | Stalin US visit முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதட்டம் ஏற்பட்டது. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்ல வேண்டும். இரவு 10 மணிக்கு அந்த விமானம் புறப்பட இருந்தது. 2 மணி நேரம் முன்னதாக ஏர்போர்ட் இயக்குனர் அலுவலகத்துக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஏர்போர்ட்டுக்கும், விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அதே போல் சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள கழிவறையிலும் வெடிகுண்டுகள் வைத்துள்ளேன். இவை அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்தவை என்று மர்ம ஆசாமி அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தான். ஆனால் அவன் சொன்னது போல் சென்னையில் இருந்து நேரடியாக சான் பிரான்சிஸ்கோவுக்கு விமானம் இல்லை. முதல்வர் துபாய் வழியாக தான் சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். எனவே முதல்வர் பயணத்தை மையப்படுத்தி வந்த வெடிகுண்டு மிரட்டலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதினர். உடனே அவர் செல்ல இருந்த துபாய் விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு பீதி பற்றி எதுவும் சொல்லவில்லை. முதல்வர் வருவதால் நடக்கும் சோதனை என்று பயணிகளும் நினைத்துக்கொண்டனர். துருவி துருவி தேடியும் வெடிகுண்டு ஒன்றும் சிக்கவில்லை. இதே நேரத்தில் மர்ம ஆசாமி சொன்ன கழிவறை பகுதியிலும் வெடிகுண்டு சோதனை நடந்தது. அங்கும் குண்டு இல்லை. பின்னர் ஏர்போர்ட் முழுதும் நிபுணர்கள் சோதனை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. ஏற்கனவே 10 முறை ஏர்போர்ட்டுக்கு இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு புரளியால் முதல்வர் சென்ற விமானம் 16 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. துபாயில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.