டெல்லியிலும் தொடரும் மழை சாலைகள் மூழ்கியதால் அவதி Delhi rain| Gujarat rain flood|
டெல்லியிலும் தொடரும் மழை சாலைகள் மூழ்கியதால் அவதி Delhi rain| Gujarat rain flood| தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் அதிகாலை முதலே மழை பெய்ததால், நகரத்தின் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகள் மூழ்கியதால் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தண்ணீரில் வாகனங்கள் நீந்தி சென்றன. சப் வேக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. மழை தொடரும் என்பதால், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 22 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு கடந்த 3 நாட்களில் ராஜ்கோட், ஆனந்த், மஹிசாகர், கெடா, அகமதாபாத், மொர்பி, ஜுனாகத், பருச் ஆகிய மாவட்டங்களில் 26 பேர் இறந்துள்ளனர். வெள்ளம் பாதித்த இடங்களில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 18 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பேசிய பிரதமர் மோடி, குஜராத் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார்.