சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தமிழகம் வருவது ஏன்?
பக்கத்து நாடான வங்கதேசத்தில் சில மாதங்களாக அரசியல் குழப்பம் நீடிக்கிறது. அந்நாட்டை சேர்ந்தவர்கள் அசாம், மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்து குடியேற முயற்சிக்கின்றனர். இதனால், எல்லை பகுதியில் உச்சக்கட்ட அலர்ட் செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து திருப்பி அனுப்புகின்றனர். கடந்த 2 மாதங்களில் 50க்கு மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு வங்கதேசத்திற்கே அனுப்பப்பட்டனர் என தெரிவித்தார்.
ஆக 29, 2024