உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓடை வெள்ளத்தை கடந்தபோது நடந்த ஷாக்கிங் சம்பவம் | Andhra heavy rain | Flood in rivers | Man missing

ஓடை வெள்ளத்தை கடந்தபோது நடந்த ஷாக்கிங் சம்பவம் | Andhra heavy rain | Flood in rivers | Man missing

ஓடை வெள்ளத்தை கடந்தபோது நடந்த ஷாக்கிங் சம்பவம் | Andhra heavy rain | Flood in rivers | Man missing in flood | ஆந்திராவின் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் கனமழை கொட்டி வருகிறது. விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, காக்கிநாடா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை தொடங்கி உள்ளது. 2 நாட்களில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் வரை இறந்துள்ளனர். பல இடங்களில் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் என்டிஆர் மாவட்டம் நுஜிவீடு மண்டலம் வெங்கடாயபாளத்தில் ஓடை தரைப்பாலத்தை கடந்து வெள்ளம் பாய்கிறது. கிராம மக்கள் கயிறு கட்டி பாலத்தை கடக்க முயன்று வருகின்றனர். ஒற்றை கையால் கயிற்றை பிடித்து தரைப்பால வெள்ளத்தை கடக்க முயன்ற ஒருவர், நீரின் வேகத்தில் தடுமாறி விழுந்தார். 2 முனையிலும் கயிறை பிடித்து நின்வர்கள், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் ராட்சத வெள்ளம் அனைவரது கண்முன்னே அவரை அடித்து சென்றது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ