உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடியாத்தம் அரசு ஆஸ்பிடலில் நர்ஸ்சுக்கு நடந்த சோகம் | Nurse | Hospital | Doctor Case

குடியாத்தம் அரசு ஆஸ்பிடலில் நர்ஸ்சுக்கு நடந்த சோகம் | Nurse | Hospital | Doctor Case

வேலூர் காட்பாடியை சேர்ந்த 19 வயது மாணவி நர்சிங் படிக்கிறார். குடியாத்தம் அரசு ஆஸ்பிடலுக்கு இரண்டு மாதம் பயிற்சிக்காக சென்றுள்ளார். இதே ஆஸ்பிடலில் பாபு என்பவர் ஆர்த்தோ டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று ஆஸ்பிடல் அறையில் தனியாக இருந்த நர்ஸ்சிங் மாணவியிடம் டாக்டர் பாபு பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறே அங்கிருந்து ஓடினார். சக மாணவிகள், நர்ஸ்களிடம் நடந்ததை சொல்லி அழுத்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் குடியாத்தல் போலீசில் புகார் கொடுத்தனர். குடியாத்தம் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆஸ்பிடலில் விசாரித்தார்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி