நோ சொல்லியும் விடல.. மலையாள நடிகை பரபரப்பு புகார் | kerala Cinema | Me too
நோ சொல்லியும் விடல.. மலையாள நடிகை பரபரப்பு புகார் | kerala Cinema | Me too கேரள சினிமாவில் நடிகைகள் பலர் பாலியல் சீண்டல் பிரச்னைகளை எதிர்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். ஒரு சில நடிகைகள் கொடுத்த புகார் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடித்து வரும் தமிழ் நடிகை சர்மிளா கசப்பான தனது பழைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 1997 ல் அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும் என்ற படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படத்துக்காக அமைத்திருந்த ஒரு செட்டில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன். அதன் பிறகு, இன்னொரு நாள் ஓட்டலில் தங்கி இருந்தேன். அப்போதும் மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். நோ என்று கதறியபடி ஹோட்டல் வெளியே ஓடினேன். ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டுக்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன். ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்துக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை. இது போல மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பரினயம் என்ற படத்தின் ஷூட்டீங் நடந்த போது ஒரு நடிகர் அவருடைய உதவியாளரை அனுப்பி சர்மிளா அட்ஜஸ்மென்ட் பண்ணுவாங்களான்னு கேட்டார். நான் நோ சொன்னேன். உடனே படபிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள சினிமாவில் உள்ளது. இது போல் 28 பேர் வரை என்னிடம் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என நடிகை சர்மிளா கூறியுள்ளார். இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணையை துவக்குவார்கள் என தெரிகிறது. தினமும் ஒரு நடிகை பாலியல் புகார் சொல்வதால் கேரள திரையுலம் திகைத்து நிற்கிறது.