தமிழகத்தில் விஜய் கட்சி செய்யப்போகும் சம்பவம் | TVK | Actor Vijay
தமிழகத்தில் விஜய் கட்சி செய்யப்போகும் சம்பவம் | TVK | Actor Vijay சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ளார் நடிகர் விஜய். இவருடைய கட்சி யாருடைய ஓட்டுகளை பிரிக்க போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் திமுக, அதிமுக குழப்பத்தில் உள்ளது. திமுக தரப்பில் உளவுத்துறை மூலமாக சமீபத்தில் சர்வே நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் 8 முதல் 10 சதவீத ஓட்டுகளை பெறலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. அந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுகவுக்கும், அரசுக்கும் எதிரான ஓட்டுகள் என்றே கூறப்பட்டுள்ளது. தனது ஆதரவு ஓட்டுகள் சிதறவில்லை என்பதை அறிந்ததும் திமுக தரப்புக்கு இருந்த கவலை போய் விட்டது. ஆனால் அதிமுக தலைமை கணிப்பு முடிவுகளை ஏற்க மறுக்கிறது. திமுக ஆதரவு ஓட்டுகளை இதுவரை எந்த கட்சியாலும் பிரிக்க முடியாத நிலை இருந்தது. அரசியலுக்கு புதிய முகமாக விஜய் வருவதால் திமுக மற்றும் அரசுக்கு ஆதரவான ஓட்டுகளையே அவர் பிரிப்பார் என்று அதிமுக கருதுகிறது. திமுகவின் கொள்கைகளையே அப்படியே பிரதிபலிக்கும் விதமாக விஜய் கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் உள்ளன. அதையொட்டியே அவரது அரசியல் பயணமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக ஆதரவு ஓட்டுகளையே விஜய் கணிசமாக பிரிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில் திமுக கூட்டணி பலம் இழக்கும். அந்த நேரத்தில் திமுகவுக்கு எதிர்ப்பு ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்து விட்டால் ஆட்சி வசப்படும் என்பது பழனிசாமியின் கணக்கு. விஜய் கட்சிக்கு எதிராக அரசியல் செய்வதன் மூலமாக திமுக எதிர்ப்பு ஓட்டுகளை மடைமாற்ற முடியும் என பழனிசாமி நினைக்கிறார். இனி விஜய் கட்சிக்கு எதிராக திரும்புமாறு அதிமுகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார். திமுகவை எப்படி கடுமையாக விமர்சிக்கிறோமோ அதற்கு சற்றும் குறையாமல் விஜயை விமர்சிக்க வேண்டும் என கட்சியினரை உசுப்பி விட்டுள்ளார். இதற்கிடையில் விஜயோடு இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாமா என நாம் தமிழர் கட்சியின் சீமான் துவக்கத்தில் ஆசைப்பட்டார். ஆனால் விஜயயோடு கூட்டு வைத்தால் தன் கட்சி கரைந்து விடும் என்பதால் அந்த ஆசையை துறந்து விட்டார். விஜய் பக்கம் யாரும் போகாமல் இருக்கவும் தன் ஆதரவு ஓட்டுகளை தக்கவைக்கவும் நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்.