தமிழகத்தை மிரட்டும் அடுத்த ரவுண்ட் மழை | southwest monsoon | heavy rain | Rain alert in Tamil Nadu
தமிழகத்தை மிரட்டும் அடுத்த ரவுண்ட் மழை | southwest monsoon | heavy rain | Rain alert in Tamil Nadu மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது ஆந்திரா, ஒடிசா கரையை கடந்த நிலையில், அந்த இரு மாநிலங்களிலும் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில், வியாழக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும். இன்னொரு புறம், மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை 8ம் தேதி வரை தொடரலாம். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.