உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் டீன் கைதான பின்னணி | Principal of kolkata hospital

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் டீன் கைதான பின்னணி | Principal of kolkata hospital

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் டீன் கைதான பின்னணி | Principal of kolkata hospital | Sandip Ghosh arrested | CBI | Woman doctor issue hospital கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. போலீசில் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்ற கொடூரன் கைது செய்யப்பட்டான். இந்த விவகாரத்தில், மருத்துவ கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது பெரிய அளவில் சந்தேகம் எழுந்தது. அதிக அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு மற்றொரு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் மருத்துவமனையில் அவர் நிதி முறைகேடு செய்ததாக கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உறவினர்கள் உரிமை கோராத சடலங்களைச் சட்ட விரோதமாக விற்றது, பயோமெடிக்கல் கழிவுகளைக் கடத்தியது, மருந்து, மருத்துவ உபகரண சப்ளையர்கள் செலுத்தும் கமிஷனுக்காக டெண்டர்களை முறைகேடாக அனுப்பியது, தேர்வில் தேர்ச்சி பெற 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்த மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் சந்தீப் கோஷ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட், புதிய பணியை தொடராமல், நீண்ட விடுப்பில் செல்ல சந்தீப் கோஷுக்குப் அறிவுறுத்தியது. டாக்டர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ, ஆகஸ்ட் 16 முதல் சந்தீப் கோஷிடம் தொடர் விசாரணையில் இறங்கியது. மருத்துவமனை ஊழல் தொடர்பாக தனியாக இன்னொரு வழக்கை பதிவு செய்த சிபிஐ, ஆகஸ்ட் 25ல் சந்தீப் கோஷ்க்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது கிடைத்த ஆவணங்களை வைத்து மீண்டும் விசாரணை தொடர்ந்தது. மொத்தம் 18 நாட்கள் விசாரித்தனர். 2 முறை உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. 2 வார கால விசாரணைக்கு பின் இப்போது நிதி முறைகேடு விவகாரத்தில் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவருடன் சேர்ந்து மருந்து விற்பனையாளர்கள் பிப்லவ் சிங்கா, சுமன் ஹசாரா, கோஷின் பாதுகாப்பு அதிகாரி அஃப்சர் அலி ஆகியோரும் கைதாகி இருப்பது கொல்கத்தாவில் பரபரப்பை கூட்டி உள்ளது. பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. இந்த ஊழலுக்கும் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடூரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ