உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் முழுதும் சோதனைக்கு பறந்த உத்தரவு | Korea Make noodles | Buldak noodles |Trichy noodles issue

தமிழகம் முழுதும் சோதனைக்கு பறந்த உத்தரவு | Korea Make noodles | Buldak noodles |Trichy noodles issue

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஸ்டெபி ஜாக்குலின். பிளஸ் 1 படித்த இவர், கடந்த 1ம் தேதி அமேசானில் நுாடுல்ஸ் வாங்கி உள்ளார். அதை இரவு உணவாக சாப்பிட்டு துாங்கிய சிறுமி, மறுநாள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர் சிறுமியின் வீட்டில் நுாடுல்ஸ் பாக்கெட்டை கைப்பற்றி விசாரித்த போது கொரியா நாட்டு தயாரிப்பான, புல்டாக் நுாடுல்ஸ் என்பது தெரிந்தது. திருச்சியில் அதை விற்ற கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அதே போல 800 கிலோ காலாவதியான பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பினர். சிறுமி சாப்பிட்ட உணவு காலாவதியானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி விசாரித்து வருகிறோம் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். நுாடுல்ஸ் தயாரிப்பு மூலப்பொருள் அநேகமாக ஒரே மாதிரியானவை தான். அதில் கூடுதலாக சேர்க்கப்படும் வாசனை ஊட்டி தான், பல இடங்களில் பிரச்னைக்கு காரணமாக இருந்துள்ளது. சீன மற்றும் கொரியா தயாரிப்பு நுாடுல்ஸ்களில் மாமிச கொழுப்பு கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ