உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அபார்ட்மென்ட்டில் இருந்து குதித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி Chennai student | ganja raid | Tambaram

அபார்ட்மென்ட்டில் இருந்து குதித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி Chennai student | ganja raid | Tambaram

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், தங்கியிருந்த வீடுகள், ஹாஸ்டல்களில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், கஞ்சா ஆயில் உள்ளிட்ட ஏராளமான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒரு மாணவி உள்பட 19 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை செங்கல்பட்டு கோர்ட் ஜாமினில் விடுவித்தது. இதில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கோண்டா ஸ்ரீனிவாஸ் நிகில் வயது 20 என்ற மாணவரும் ஒருவர். போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் நிகிலை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ