புடின் பொத்தி பொத்தி வைத்த ரகசியம் உடைந்தது | Putin-Alina Kabaeva Secret love | Putin secret sons
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய நாட்டின் அதிபர் புடினுக்கு பாதுகாப்பு விஷயம் சார்ந்த பல ரகசியங்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை எல்லாம் விட உலகமே பரபரப்பாக பேசுவது புடினின் காதல் ரகசியத்தை பற்றி தான். 1983ல் லியுட்மிலா என்ற பெண்ணை புடின் திருணம் செய்தார். லியுட்மிலா மூலம் புடினுக்கு மரியா, கேத்தரினா என்ற 2 மகள்கள் பிறந்தனர். ஒரு கட்டத்தில் லியுட்மிலாவுடன் புடினுக்கு பிரிவு வந்தது. அவரை விவாகரத்து செய்தார். அதற்கு முன்னதாகவே ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவுடன் புடினுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் கணவன், மனைவியாக வாழத்துவங்கினர். ஆனால் வெளிப்படையாக அல்ல; ரகசியமாகவே வாழ்ந்தனர். தனது ரகசிய காதல் பற்றி ஒரு போதும் புடின் வாய் திறந்தது இல்லை. புடினுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது. அவரது ஆசையை ரகசிய காதலி அலினா நிறைவேற்றி கொடுத்தார்.