மத்திய அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி! Karunanidhi pen monument | Green tribunal | Che
மத்திய அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி! Karunanidhi pen monument | Green tribunal | Chennai திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை, கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதி என, மீன்வள துறை அறிவித்துள்ளது. இந்த கடற்கரை பகுதியில், புயல், சுனாமிக்கு வாய்ப்புள்ளது. எனவே, கருணாநிதி பேனா நினைவு சின்னம் உள்ளிட்ட, எவ்வித கட்டுமானங்களையும் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. அதை விசாரித்த தீர்ப்பாயம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மெரினா அருகே கடலில், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க, 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதில் பேனா சின்னம் அமைப்பதால், கடலரிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்து, மத்திய சுற்றுச்சூழல் துறை மண்டல அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவரே, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினால், அது நியாயமானதாக இருக்குமா? கட்டுமான பணிகள் நடந்த பின் பாதிப்பு கண்டறியப்பட்டால், மத்திய அரசு என்ன செய்யும்? எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இனி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையே ஆய்வு நடத்தி, அதற்கான செலவை, திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். ஏற்கனவே, மத்திய அரசு விதித்த நிபந்தனையின் படி, தமிழக அரசு விரைந்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 30ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.