சிதம்பரம் அருகே நடந்த கோர சம்பவம்; தப்பி ஓடிய லாரி டிரைவர் | Chidambaram Accident | Car Accident
மயிலாடுதுறை நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர், வயது 58. இவர் தனது உறவினர் ஒருவரை பாண்டிச்சேரி மருத்துவமனையில் சந்திக்க சென்றார். அவருடன் காரில் அவரது தங்கை ஹஜிதா பேகம், மகள் நிஷா வயது 27, அவரது கணவர் யாசர் அரபத் வயது 35, இவர்களது 3 வயது ஆண் குழந்தை உடன் சென்றனர். பின் அங்கிருந்து இரவு 1.30 மணி அளவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். யாசர் அரபத் காரை ஓட்டினார். விழுப்புரம் டு நாகை ஹைவேஸில் பி. முட்லூர் ஆனையங்குப்பம் அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே மேம்பால பணிக்காக ஒன்வேயாக பாதை மாற்றப்பட்டு இருந்துள்ளது. அதிகாலை 2.30 மணி அளவில் அந்த வழியாக செல்லும் போது எதிரில் வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 5 பேரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.