ராகுல் குற்றச்சாட்டுக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் சவால் | Manoj sinha | J&K Governor | Rahul |Congress
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அக்டோபர் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல், கடந்த வாரம் அங்கு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமையை பறித்து முதல்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாக கூறினார். கவர்னர் தான் ஜம்மு காஷ்மீரை இயக்குகிறார். அவர் மூலமாக மன்னராட்சி நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள வளங்கள், செல்வங்கள், வேலை வாய்ப்புகள் வெளியாட்களுக்கே வழங்கப்படுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.