உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நமாஸ் செய்யும்போது ஒலி பெருக்கி சத்தம் கூடாது என அறிவுறுத்தல்! WestBengal | Durga Puja

நமாஸ் செய்யும்போது ஒலி பெருக்கி சத்தம் கூடாது என அறிவுறுத்தல்! WestBengal | Durga Puja

நமாஸ் செய்யும்போது ஒலி பெருக்கி சத்தம் கூடாது என அறிவுறுத்தல்! WestBengal | Durga Puja | Care taking govt | Conditions Imposed வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்கு பிறகு வங்க தேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. நாட்டின் 48 மாவட்டங்களில் 278 இடங்களில் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணி தெரிவித்தது. இந்துக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி இந்தியா வங்க தேச அரசை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜை, வங்க தேசத்திலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 9 முதல் 12 வரை துர்கா பூஜைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்துக்களுக்கு வங்க தேச அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. முஸ்லிம்கள் நமாஸ் செய்யும்போதும், ஆஜான் தொழுகை நேரத்தின்போதும் துர்கா பூஜை நடவடிக்கைகள், ஒலி பெருக்கிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி இதற்கான அறிவுறுத்தல்களை பூஜை குழுக்களுக்கு வழங்கி உள்ளார். அவர்களும் அதனை ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ