முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார் Maitreyan rejoins ADMK| Palanisamy| BJP
முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார் Maitreyan rejoins ADMK| Palanisamy| BJP தமிழக அரசியலில் பாஜ - அதிமுக - பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். அடிப்படையில் டாக்டரான இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 2002 முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன், 2022ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக பாஜவில் இருந்த மைத்ரேயன், இன்று அந்த கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் மைத்ரேயன் கடிதம் கொடுத்தார். அவரது கோரிக்கையை பழனிசாமி ஏற்றுக் கொண்டதை அடுத்து மீண்டும் அதிமுகவில் மைத்ரேயன் இணைந்துள்ளார் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.