உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி காதில் புற்களை சொருகி பெண் வாழ்த்த காரணம்? Jahwa gift for Modi | Ranchi Airport

மோடி காதில் புற்களை சொருகி பெண் வாழ்த்த காரணம்? Jahwa gift for Modi | Ranchi Airport

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையம் வந்திறங்கிய மோடிக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஒரு பெண் மோடியிடம் சில புற்களை காண்பித்து அது குறித்து விளக்கினார். பின் அவற்றை மோடியின் காதில் வைத்தார். அங்கிருந்தவர்கள் இந்த காட்சியை பார்த்து வியந்தனர். ஜார்க்கண்ட்டில் இன்று கர்மா எனப்படும் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் விரதம் இருந்து நெல், கோதுமை உள்ளிட்ட 9 வகை பயிர்களை விதைத்து, அறுவடை சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திப்பர். அதே போல், உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. அப்படி விளைந்த பயிர்களின் புற்களைத்தான் அந்த பெண் மோடியிடம் கொடுத்தார்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை