அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி | Ward Boy Arrested | Children's Hospital Kolkata
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் மீண்டும் கொல்கத்தா மருத்துவமனைகளில் பாலியல் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த மாத துவக்கத்தில் மேற்குவங்கத்தின் பிர்பும் ( Birbhum) மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நர்சுக்கு பாலியல் அத்துமீறல் நடந்தது. காய்ச்சல் காரணமாக அட்மிட் ஆன நோயாளிக்கு அந்த நர்ஸ் ட்ரிப் ஏற்றும் போது அவர் நர்ஸிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. அந்த நோயாளி பாலியல் ரீதியாக அத்து மீறியதாகவும், தகாத வார்த்தைகள் கூறியதாகவும் நர்ஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர்.