திடீர் ஆய்வா? திட்டமிட்ட ஆய்வா? | Udhayanidhi | DMK | Mattuthavani Bus Stand | Madurai
மதுரையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடங்களில் ஒன்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட். கடந்த திங்களன்று மதுரைக்கு வந்த அமைச்சர் உதயநிதி இங்கு திடீர் ஆய்வு நடத்தினார். திடீர் ஆய்வு போல தெரிந்தாலும் முன்னதாகவே மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் சில முன்னேற்பாடு பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. சரியாக அந்த இடங்களுக்கு மட்டும் சென்று ஆய்வு செய்துள்ளார் உதயநிதி. ஓடாமல் நின்ற ஃபேன், மின் சப்ளை போன்ற பணிகள் 3 நாட்களுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. பயணிகளிடம் எந்த குறைகளையும் அவர் கேட்கவில்லை. பெண்மணி ஒருவர் பென்ஷன் வரவில்லை என கோரிக்கை வைத்தார். உங்க போன் நம்பரை கொடுங்கள் நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு கிளம்பினார்.