இந்த ஆட்சி காலத்துக்குள் நிறைவேற்ற முடிவு! PM Modi | BJP | One Nation One Election
இந்த ஆட்சி காலத்துக்குள் நிறைவேற்ற முடிவு! PM Modi | BJP | One Nation One Election லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாட்கள் முடிந்துள்ளது. இந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இந்த, 100 நாட்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி, தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த முறையை, இந்த ஆட்சி காலத்துக்குள் அமல்படுத்த மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதும், சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா உரையின் போதும், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார். இது தொடர்பாக, சட்டக் கமிஷன் தன் பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆட்சி காலத்துக்குள் இதை நடைமுறைபடுத்தி, 2029 தேர்தலில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கோவிட் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் துவக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது, என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.