கேரளாவில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Nipah virus | Nipah virus Kerala
கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் பெங்களூருவில் படித்து வந்தார். காலில் அடிப்பட்டதால் மலப்புரம் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தொடர் காய்ச்சல் காரணமாக பல்வேறு ஆஸ்பிடல்களில் சிகிச்சை பெற்றார். கடைசியாக பெரிந்தல்மன்னா பகுதியில் உள்ள ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்ற இளைஞர் கடந்த 9ம் தேதி இறந்தார். ஏற்கனவே இவரது ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் 9ம் வகுப்பு மாணவன் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தான். இதனால் இந்த வாலிபரும் நிபா வைரசால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதார அதிகாரிகளுக்கு எழுந்தது. உடனடியாக அவரது ரத்த மாதிரிகள் கோழிக்கோடு ஆஸ்பிடலுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு பாசிடிவ் என வந்துள்ளதால் அந்த இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தது உறுதியாகி உள்ளது.