உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் தொகையை பெருக்க அதிபர் புடின் போட்ட உத்தரவு

மக்கள் தொகையை பெருக்க அதிபர் புடின் போட்ட உத்தரவு

மக்கள் தொகையை பெருக்க அதிபர் புடின் போட்ட உத்தரவு ரஷ்யாவில் சமீபகாலமாக மக்கள்தொகை எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இந்தாண்டு ஜூன் வரையிலான 6 மாதங்களில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவே குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டில் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில், 5.99 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 16,000 குறைவாகும். உக்ரைன் மீதான போர் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இறந்துள்ளனர். இதுவும் மக்கள்தொகை எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாகும். குழந்தை பிறப்பை ஊக்குவிக்க ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவாகரத்து கோருவதற்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன. கருக்கலைப்பு செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 40 வயது வரையுள்ள பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்த பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சில மாகாணங்களில் முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, 9.40 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதன் அடுத்தக் கட்டமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, அலுவலகத்தின் உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையின்போது, தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படும். சுகாதார அமைச்சர் டாக்டர் யேவ்ஜெனி கூறும்போது, அலுவலக வேலை அதிகமாக உள்ளது என்று கூற கூடாது. வாழ்க்கையும் முக்கியம். குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்க வேண்டும். இதை ஊக்குவிக்கவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ