நமீபியா, ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத வறட்சி Zimbabwe government
நமீபியா, ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத வறட்சி Zimbabwe government orders to kill 200 elephants for food| Namibia ordered to kill 700 wild animals ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. போதிய மழையின்மை, கடும் வெயில், நிலத்தடி நீர் மட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், மனிதர்கள் மட்டுமின்றி காட்டு விலங்குகளும் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுக்குள் போதிய உணவு கிடைக்காததால், வன விலங்குகள் ஊருக்குள் இரைதேடி வருகின்றன. அதேநேரத்தில் மனிதர்கள் உணவுத் தேவைக்காக காட்டை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால், மனிதர்கள் - விலங்குகள் இடையே உணவுப் போர் வெடித்துள்ளது. இந்நிலையில், கடும் வறட்சியிலும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வளரும் குறைந்தபட்ச பயிர்களை, வன விலங்குகளிடம் இருந்து காக்கவும், மனிதர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யவும், 83 யானைகள் உட்பட 700 வன விலங்குகளை வேட்டையாட நமீபியா அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. நமீபியாவின் வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து இந்த உத்தரவை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்டையாடப்படும் வன விலங்குகளின் மாமிசங்களை உணவு தேவைப்படும் மனிதர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நமீபியாவை ஒட்டியுள்ள ஜிம்பாப்வே நாட்டில் மனிதர்களின் உணவுத் தேவைக்காக 200 யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வேட்டையாடப்படும் யானைகளின் மாமிசத்தை மனிதர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனிதர்களின் உணவுத்தேவைக்காக நமீபியா, ஜிம்பாப்வே நாடுகளில் விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசுகளே நடவடிக்கை எடுத்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நமீபியா, ஜிம்பாப்வேயில் இன்னும் சில நாட்களுக்கு வறட்சி நீடித்தால், நிலைமை மிகவும் மோசமாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். .