தமிழக அரசியலை புரட்டி போடும் சம்பவம் | Selvaperunthagai | BSP
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் வெட்டி கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகள், வக்கீல்கள் என 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, பாஜ, தமாக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தமான் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொது செயலாளர் ஜெய்சங்கர் காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
செப் 19, 2024