உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடி வெட்டியதில் காயமடைந்த கான்ஸ்டபிள்

ரவுடி வெட்டியதில் காயமடைந்த கான்ஸ்டபிள்

கோவை ஆவாரம்பாளையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சத்ய பாண்டி என்ற ரவுடி 5 பேர் கும்பலால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாகர்கோவிலை சேர்ந்த ரவுடி ஆல்வின் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல், ஆட்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ஆல்வின், அதன் பின் தலைமறைவானார். குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது கோர்ட். ரவுடி ஆல்வினை போலீசார் தேடி வந்தனர். கோவை கொடிசியா மைதானத்தில் அவர் சுற்றித்திரிவதை அறிந்து பீளமேடு போலீசார் அங்கு சென்று சுற்றிவளைத்தனர். போலீசை கத்தியால் தாக்கிவிட்டு ரவுடி ஆல்வின் தப்பி ஓடினார். இதில், கான்ஸ்டபிள் ராஜ்குமாருக்கு கைமணிக்கட்டில் வெட்டுக்காயம் விழுந்தது. ரவுடியை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டார். இரண்டு கால் முட்டிகளிலும் குண்டுகள் பாய்ந்து ரவுடி ஆல்வின் சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் ராஜ்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை நடக்கிறது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை