செங்கல்பட்டில் சம்பவம் பரபரப்பு கடிதம் சிக்கியது software engineer chengalpattu dies
செங்கல்பட்டில் சம்பவம் பரபரப்பு கடிதம் சிக்கியது software engineer chengalpattu dies police crime black magic work pressure software company செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ஜெயராணி (வயது 45). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். . சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கார்த்திகேயன் பணிபுரிந்து வந்தார். கார்த்திகேயனுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாத காலமாக கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். மன உளைச்சலால் அதிகமாகி தனிமையில் பேசத்துவங்கியுள்ளார்.அதைத் தொடர்ந்து, மனநல மருத்துவரிடம் மனைவி அழைத்துச் சென்றார். அவரிடம் 3 மாதமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மனைவிமற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான தேனிக்கு சென்றார். மனைவி, குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு கார்த்திகேயன் மட்டும் வேங்கடமங்கலத்துக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்றிரவு மனைவி பலமுறை போன் செய்தும் கார்த்திகேயன் எடுக்கவில்லை. மனைவி பதறியடித்துக் கொண்டு இரவோடு இரவாக புறப்பட்டு இன்று காலை வீட்டுக்கு வந்தார். கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு, உடல் முழுக்க மின்வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் கார்த்திகேயன் இறந்து கிடந்தார். உஷாரான அக்கம் பக்கத்தினர் உடலை தொடாமல் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கார்த்திகேயன் வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்த போலீசார், உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் மின்கம்பிகளை சுற்றிக்கொண்டு தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மைகள் தெரிய வரும் எனவும் போலீசார் கூறினர். தற்கொலை செய்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். எனக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள். கெட்ட சக்திகள் என்னை தொடர்ந்து பயமுறுத்துகின்றன. தூங்க விடாமல் செய்கின்றன. அந்த கொடுமையில் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்ளவே நான் தற்கொலை முடிவை எடுத்தேன் என கடிதத்தில் கார்த்திகேயன் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பணிச்சுமையால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் ஆபீசில்போய் விசாரித்தால் உண்மை தெரியும் என குடும்பத்தினர் கூறினர். பணிச்சுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.