உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சியில் தொடங்கியது தனிப்படையின் ஆபரேஷன் அகழி வேட்டை | Operation agazhi begins

திருச்சியில் தொடங்கியது தனிப்படையின் ஆபரேஷன் அகழி வேட்டை | Operation agazhi begins

திருச்சியில் தொடங்கியது தனிப்படையின் ஆபரேஷன் அகழி வேட்டை | Operation agazhi begins | Trichy police | Land grab gangs | ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மக்களின் நிலங்களை அபகரிப்பதாக திருச்சி, புதுக்கோட்டை போலீசிடம் புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 25 தனிப்படை அமைத்தனர். தனிப்படை மூலம் திருச்சியில், ஆப்பரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தனர். முதல்கட்டமாக பப்லு, கொட்டப்பட்டு ஜெய், பட்டரை சுரேஷ், டேவிட் சகாயராஜ் உள்ளிட்ட 14 பேரின் விபரங்களை சேகரித்தனர். 19ம் தேதி மாலை முதல், ஆப்பரேஷன் அகழி அதிரடி சோதனையை துவக்கினர். பட்டியலில் உள்ளவர்களின் வீடு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. அன்று இரவு வரை நடந்த சோதனையில், அவர்களுக்கு தொடர்பு இல்லாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள 258 நிலம், சொத்து ஆவணங்கள் கிடைத்தன. 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 75 புரோ நோட்டுகள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 மொபைல் போன்கள், 84 சிம் கார்டு உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். மைக்கேல் சுரேஷ் வீட்டில் மட்டும் 66 அசல் பத்திரங்கள் கிடைத்தன. அத்தனையும் சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தொழில் மூலம் மிரட்டி பெற்றது தெரிய வந்தது. நில விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த எடமலைப்பட்டிபுதுாரை சேர்ந்த சந்திரமவுலி வீட்டை சோதனை செய்த போது அவர் தப்பி ஓடினார். இதையடுத்து திருச்சியின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். முக்கொம்பு, நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில், அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். எல்லீஸ் பூங்கா சுவரில் கார் மோதிய நிலையில், உள்ளே இருந்தவர்களில் 2 தப்பி ஓடினர். காரில் இருந்த மற்றொருவரை பிடித்து விசாரித்ததில், தனிப்படை போலீஸ் சோதனையின்போது தப்பியோடிய எடமலைப்பட்டிபுதுார் சந்திரமவுலி என்பது தெரிந்தது. காருக்குள் இருந்த அரிவாள், இரும்பு வாள், கம்பி போன்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சந்திரமவுலி நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்தவர். போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருவரை தேடுகின்றனர். ஆப்பரேஷன் அகழி சோதனைக்காக 3 பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் முதல் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார். இன்னும் இரண்டு பட்டியலில் உள்ளவர்கள் அடுத்ததாக சோதனை செய்யப்படுவர். நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை