உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணர்வுப்பூர்வமான பிரச்னையில் கை வைத்திருப்பதாக திருமாவளவன் பேச்சு | Thirumavalavan | VCK

உணர்வுப்பூர்வமான பிரச்னையில் கை வைத்திருப்பதாக திருமாவளவன் பேச்சு | Thirumavalavan | VCK

மது, போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அக்டோபர் 2ல் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு ஒன்றை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய அளவில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. முதல்வர் அமெரிக்காவில் இருந்த சமயத்தில் மாநாடு அறிவிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவுக்கு அழைப்பு, ஆட்சியில் பங்கு என்றெல்லாம் திருமாவளவன் பேசிய வீடியோ வெளியானதால் திமுக கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியது. ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் திருமாவளவன் அவரை சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அரசிடம் கோரிக்கை வைப்பதற்காக நடக்கும் மாநாட்டில் பங்கேற்க ஆளும் கட்சியையே அழைத்ததால் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால் மாநாட்டை எதிர்நோக்கி மது ஒழிப்பு தொடர்பாக திருமாவளவன் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை