லட்டு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் கார்த்தி பகிரங்க மன்னிப்பு | Pawan Kalyan | Karthi
கார்த்தி நடித்த மெய்யழகன் படம் தெலுங்கில் சத்தியம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சியில், கார்த்தியின் கண்ணா லட்டு திண்ண ஆசையா வசனம் இடம் பெற்ற போஸ்டர் திரையிடப்பட்டது. அப்போது கார்த்தி, இப்போது லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சி மிக்க விஷயம் லட்டு வேண்டாம் என கூறியதால் அரங்கமே சிரிப்பலையில் முழ்கியது. கார்த்தியின் பேச்சை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டித்தார். சினிமா நிகழ்வில் லட்டுவை கிண்டலடிப்பீர்களா, லட்டு உணர்ச்சிமிக்க விஷயமா, ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். சனாதன தர்மம் வரும்போது பேசும் வார்த்தையை 100 முறை யோசித்து பேச வேண்டும் என கடுமையாக கார்த்தியை சாடினார். இது தொடர்பான செய்தி வைரலானது. இதில் அப்செட் ஆன கார்த்தி, மெய்யழகன் படத்தின் ஆந்திர வெளியீட்டில் சிக்கல் வரலாம் என்பதால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.