/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி-சென்னை ரோட்டில் பயங்கர விபத்து | Ulundurpet accident | van accident | trichy-chennai road
திருச்சி-சென்னை ரோட்டில் பயங்கர விபத்து | Ulundurpet accident | van accident | trichy-chennai road
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே வாழைப்பந்தல் கிராமம் உள்ளது. இங்கிருந்து 20 பேர் வேனில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு மீண்டும் அதே வேனில் ஊருக்கு புறப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. திருச்சி ஜிஎஸ்டி டு சென்னை ரோட்டில் மேட்டத்தூர் என்ற இடத்தில் வந்த போது, எதிர்பாராத விதமாக ரோட்டின் இடதுபுறம் இருந்த மரத்தில் வேன் பயங்கரமாக மோதியது. வேனின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
செப் 25, 2024