முடா வழக்கால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு BJP | Congress| MUDA Scam
முடா வழக்கால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு BJP | Congress| MUDA Scam| Siddaramaiah| Karnataka CM Resignation மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் நில ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் தவார்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து தாக்கல் செய்த சித்தராமையாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கவர்னரின் ஒப்புதல் செல்லும் எனவும் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சித்தராமையா தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என, எதிர்க்கட்சிகளான பாஜ, மஜத வலியுறுத்துகின்றன. சித்தராமையாவை பதவி விலக சொல்லி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், கர்நாடக சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நியாயம் அல்ல. சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோகா கூறினார். மூடா நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக கோர்ட்டே கூறியுள்ளது. இது ஒன்றும் நாங்கள் சொல்வதல்ல. லோக் ஆயுக்தா விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த அமைப்பு சுதந்திரமானது என்றாலும், அதற்காக நியமிக்கப்படும் விசாரணை அதிகாரியை அரசு தான் நியமிக்கிறது. முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசே அதிகாரியை நியமித்தால் அதில் எந்த அளவுக்கு நடுநிலை இருக்கும் என்பது சந்தேகமே. தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் எனவும் அசோகா வலியுறுத்தினார்.