உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்த ஒரு தடவை மன்னிச்சி விட்டுடுங்கம்மா Government bus women bus conductor fight

இந்த ஒரு தடவை மன்னிச்சி விட்டுடுங்கம்மா Government bus women bus conductor fight

இந்த ஒரு தடவை மன்னிச்சி விட்டுடுங்கம்மா Government bus women bus conductor fight Theni Uthamapalayam தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கருக்கோடை அருகே 400 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வீடில்லாத ஏழைகளுக்கு அரசு கட்டிக்கொடுத்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் வசதிக்காக பைந்தமிழ் குடியிருப்பு என்ற பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் சரிவர நிற்பதில்லை; அலைக்கழிக்கிறார்கள் என பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். பஸ்சை நிறுத்தாத கண்டக்டர், டிரைவருடன் பெண்கள் வாக்குவாதம் செய்தபடி வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ