உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 2 ஆசாமிகள் கைது Methamphetamine

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 2 ஆசாமிகள் கைது Methamphetamine

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 2 ஆசாமிகள் கைது Methamphetamine| pseudoephedrine| Chennai Port | Seized | மெத்தபெட்டமைன் methamphetamine என்கிற போதைப்பொருளை தயாரிக்க முக்கியமான மூலப் பொருளாக சூடோஃபெட்ரின்pseudoephedrine என்னும் போதைபொருள் பயன்படுகிறது. ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மெத்தபெட்டமைன் தயாரிக்க சூடோஃபெட்ரின் போதை பொருளை கடத்தியதாகத்தான் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட போதை பொருளாக சூடோஃபெட்ரின் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொகை மதிப்புள்ள சூடோஃபெட்ரின் போதை பொருளை சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருப்பதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்னை துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். கண்டய்னர் மூலம் கடத்த இருந்த 110 கிலோ சூடோஃபெட்ரினை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 110 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட அபுதாஹிர் மற்றும் அகமது பாஷா ஆகிய இருவரை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார், ரூ.3.9 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பும் இது போல நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு சூடோஃபெட்ரின் போதை பொருளை கடத்தி இருப்பது தெரியவந்தது. சூடோஃபெட்ரின் எங்கிருந்து சென்னைக்கு கடத்தி வரப்படுகிறது என்பதற்கு அவர்கள் உரிய பதிலை சொல்ல மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. கட்டுமான பணிகளுக்கு பயன்படும் குவார்ட்ஸ் பவுடர் மூட்டைகளுக்குள் சூடோஃபெட்ரினை சிறிய பைகளில் மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர். ஒவ்வொரு குவார்ட்ஸ் பவுடர் மூட்டைக்குள்ளும் தலா 3 கிலோ சூடோஃபெட்ரின் போதைபொருளை மறைத்து வைத்துள்ளனர். இதனால் 37 குவார்ட்ஸ் மூட்டைகளையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம், இதே போல சென்னை துறைமுகத்தில் இருந்து 10.13 கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.50.65 கோடி. இது தொடர்பாக ஆறு பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !