உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர்கள் வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக மாறுங்கள் | Agarwal Educational Trust

இளைஞர்கள் வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக மாறுங்கள் | Agarwal Educational Trust

இளைஞர்கள் வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக மாறுங்கள் | Agarwal Educational Trust | Golden Jubilee | Auditor Gurumurthy | Ex President | Chennai சென்னை கிண்டியில் நடந்த அகர்வால் கல்வி அறக்கட்டளை பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களின் கால்களை கழுவும் வழிமுறை பல ஆண்டுகளாக நமது நாட்டில் இருக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் இணக்கம் ஆகிறது. ஆனால் இப்போது இந்த வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். கல்வி நிறுவனங்கள் வேலை தேடுபவர்களை உருவாக்காமல் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பிற நிறுவனங்களிடம் வேலை தேடி செல்லாமல் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் வட இந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்கின்றனர். ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அவர்கள் செய்யும் சேவை மக்களுக்கு தெரிவதில்லை. இனி வரும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் நமது கல்வி முறையை ஒரே நாளில் மாற்றி விட முடியாது அதற்கு அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அவர்களை எதிர்பார்க்காமல் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக அவர்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை