கடைசி தலையும் காலி: இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி | Hassan Nasrallah
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்துகிறது. கடந்த திங்கள் முதல் வியாழன் வரை நடந்த தீவிர சண்டையில் லெபனானில் மட்டும் 700க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேலுக்கு பெரிய சேதம் எதுவும் இல்லை. ஒரு சிலர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். ஹிஸ்புல்லாவை முற்றிலுமாக ஒழிப்பது சவாலானது என இஸ்ரேலுக்கு தெரியும். அவர்களை இயக்கும் ரிமோட்களை தூக்கிவிட்டால் ஹிஸ்புல்லா நிலைகுலைந்து போகும் என்பதே இஸ்ரேலின் திட்டம். இதனை உறுதிபடுத்தும் விதமாக ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கியது. ஒரு வாரத்தில் ஹிஸ்புல்லாக்களின் 4 முக்கிய தளபதிகளை இஸ்ரேல் கருவறுத்துள்ளது.