இப்போ பிடிக்கப்பட்ட கும்பல் சும்மா சாம்பிள் தானாம் | Mewat Gang | ATM Theft
கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் வெள்ளியன்று கன்டெய்னர் லாரியில் தமிழகத்துக்குள் நுழைந்தது. செக்போஸ்ட்களில் நிற்காமல் வாகனங்கள் மீது மோதிவிட்டு வந்த லாரியை தமிழக போலீசார் துரத்தினர். நாமக்கல் மாவட்டம் வெப்படை காட்டு பகுதியில் தமிழக போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கொள்ளையர்களிடம் துப்பாக்கி இருந்தது. தப்பி செல்ல முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு நடந்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமான் ஸ்பாட்டில் இறந்தான். அசீன் என்ற இன்னொரு கொள்ளையனை குண்டுகாயத்துடன் போலீசார் மடக்கினர். கண்டெய்னர் லாரிக்குள் இருந்த எஞ்சிய 5 கொள்ளையன்களும் கைது செய்யப்பட்டனர்.
செப் 28, 2024