சுனிதா குழுவை மீட்க பாய்கிறது SpaceX Crew 9 | NASA | SLDelta45
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஜூலை 5ல் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். ஆய்வு பணிகள் முடித்துவிட்டு பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில், ஹீலியம் வாயு கசிவு, உந்து விசை கருவியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 8 நாள் பயணம் 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. இனி அடுத்த வருடம் பிப்ரவரியில் தான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா கூறியது. இதையடுத்து பழுதான போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் ஆளே இல்லாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது. மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்கியது. அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இப்போது விண்வெளி மையத்தில் 3 மாதங்களுக்கு மேலாக தவித்து வரும் சுனிதா, புட்ச் இருவரையும் பூமிக்கு அழைத்து வர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. க்ரூ-9 ராக்கெட் உதவியுடன் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது.