உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறுதி சடங்கின் போது தெரிய வந்த பகீர் உண்மை | Coimbatore | TASMAC

இறுதி சடங்கின் போது தெரிய வந்த பகீர் உண்மை | Coimbatore | TASMAC

இறுதி சடங்கின் போது தெரிய வந்த பகீர் உண்மை | Coimbatore | TASMAC கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். மதுக்கரையை சேர்ந்த சஹானாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இடிகரை ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். மணிகாரம்பாளையத்தில் உள்ள கோழி கடையில் நந்தகுமார் வேலை செய்கிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. அடிக்கடி குடித்துவிட்டு சஹானாவிடம் பணம் கேட்டு தகராறு செய்வாராம். கடந்த 25 ஆம் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சஹானா பேகம் வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் நந்தகுமார் தலையில் அடித்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வந்துள்ளது. போதையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை எதுவும் எடுக்காமல் வேலை பார்க்கும் கோழி கடைக்கு சென்றுள்ளார். அங்கேயே படுத்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் கோழிக்கடை உரிமையாளர் பிரகாஷ் வந்து நந்தகுமாரை எழுப்பி உள்ளார். அப்போது நந்தகுமார் எழுந்திருக்கவில்லை. மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ் டாக்டரை அழைத்துள்ளார். டாக்டர் சேதித்து பார்க்கையில் நந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோழி கடை உரிமையாளர் நந்தகுமார் மனைவி சஹானாவுக்கு தகவல் சொன்னார். உடனே அவருடைய உடலை சொந்த ஊரான கிணத்துக்கடவு பகுதிக்கு எடுத்து சென்றார் சஹானா. அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடந்த போது நந்தகுமார் தலையில் காயம் இருப்பதை உறவினர்கள் கவனித்தனர். உடனடியாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பிடலுக்கு உடலை எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு இறந்தது தெரிய உள்ளது. இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நந்தகுமார் மனைவி சஹானாவை கைது செய்தனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை